பல்லவியும் சரணமும் - VIII
இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
'kudigaaranin uLaRaLgaL' வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர், Icarus Prakash மற்றும் சந்திரவதனா ஆகியோர் 2 பேராவது பின்னூட்டம் இட்டபிறகு தான், போட்டியில் ஆஜராகுமாறு, பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் :-)) ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!
1. என் வாழ்வில் நீ வந்தது விதியானால், நீ எந்தன் உயிரன்றோ ...
2. மண் தொட்டதால் இன்று செவ்வானம் போல் ஆச்சு, வெண்சொர்க்கமே பொய் ...
3. கடற்கரை காற்றே வழியை விடு, தேவதை வந்தாள் என்னோடு ...
4. முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே, என் காதல் சேதி போகும் பல்லாக்கிலே ...
5. மணவினைகள் யாருடனோ, மாயவனின் விதிவகைகள் ...
6. அழகான ஆசை முகம், அடங்கதா ஆசை தரும், பொன்னந்தி மாலை ...
7. நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேடையும் தேவையென்ன? சொந்தங்களே இல்லாமல் ...
8. நீ பார்த்ததால் தானடி பூ பூத்தது மார்கழி ...
9. தென்காற்றின் இன்பங்களே, தேனாடும் ரோஜாக்களே, என்னென்ன ஜாலங்களே ...
10. பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடி வைத்து, பார்த்திருந்த காலமெல்லாம் பழங்கதை ஆனதடி ...
என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
4 மறுமொழிகள்:
1. பூங்காற்று புதிதானது - மூன்றாம் பிறை
2. ஓ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை
3. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்
4. ராஜராஜசோழன் நான் -
5. கீரவாணி - பாடும் பறவைகள்
7. வசந்த கால நதிகளிலே - மூன்று முடிச்சு
8. மன்றம் வந்த தென்றலுக்கு - மெளன ராகம்
9. என் இனிய பொன்நிலாவே - மூடுபனி
10 . வானுயர்ந்த சோலையிலே - இதயக்கோவில்
அச்சச்சோ... உங்க எச்சரிக்கையைப் படிக்காமலேயே பதில் எழுதிட்டேனே ...
பிரகாஷ்,
இந்த மாதிரி தப்பாட்டம் ஆடினா, கங்குலி மாதிரி உங்களை 'suspend' செய்ய வேண்டி வரும் :-) கங்குலி தப்பித்து விட்டார் என்பது வேற விஷயம். இருந்தாலும், என் பாராட்டுக்கள். போன முறை, கொஞ்சம் out of form-ல இருந்தீங்க போல! இப்போ கலக்கிட்டீங்க, 100/100 தான் போங்க :))
Jsri-க்கு தான், என்ன செய்தாலும் மண் ஒட்டாதே :)) சந்திரவதனா இன்னும் என் வலைப்பதிவை பார்க்கலை போல இருக்கு!
என்றென்றும் அன்புடன்,
பாலா
பார்த்தேன். இருவர் எழுதிய பின் வருவோமென நினைத்து மீண்டும் வந்த போது
எல்லாம் எழுதப் பட்டு விட்டத.
Post a Comment